ஐநா தலைமையகத்தில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ள பிரதமர் மோடியின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் (மான் கீ பாத்) நிகழ்ச்சியின் 100வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சி நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் மோடி உரையை கேட்க வசதியாக ஐநா இந்த ஏற்பாடை செய்துள்ளது. இதனிடையே 100வது மான் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ள பிரதமர் மோடிக்கு பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்ச்சி இந்தியாவில் சுகாதாரம், பெண்முன்னேற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் பெரும் பங்கு வகித்ததாகவும் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியானது துப்புரவு, சுகாதாரம், மகளிருக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்டவைகளை நடைமுறைப்படுத்த ஊக்குவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.







