“விவசாயிகள் மேலும் அதிகாரம் பெற்றால்…” – பிரதமர் மோடி

மத்திய அரசின் திட்டங்கள் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பிராதான் மந்திரி கிசான் சம்மன் நிதி உள்ளிட்ட திட்டங்கள் கோடிக்கணக்கான…

மத்திய அரசின் திட்டங்கள் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பிராதான் மந்திரி கிசான் சம்மன் நிதி உள்ளிட்ட திட்டங்கள் கோடிக்கணக்கான விவசாயிகள் அதிகளவில் பயன்பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் “நாடு நமது விவசாய சகோதர சகோதரிகளால் பெருமிதம் கொள்கிறது. நாட்டில் உள்ள விவசாயிகள் மேலும் அதிகாரம் பெற்றால் புதிய இந்தியா மேலும் வளமாக இருக்கும். விவசாயம் தொடர்பான பிற திட்டங்கள் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருகிறது”  என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “விவசாயிகள் குறைந்தபட்ச வருமானமாக ஆண்டுக்கு ரூ.6,000 பெற்று வருவது மத்திய அரசின் முயற்சியாகும். பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் 11.3 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 82 கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது. இ-மார்க்கெட் மூலம் விவசாயிகள், வர்த்தகர்கள் பொருட்களை வாங்கவும், சீரான விலையைக் கண்டறியவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.