ஏலம் விடப்பட்ட பிகாசோ ஓவியம்; ரூ.1160 கோடிக்கு விற்பனை!

ஸ்பானிஷ் ஓவியர் பாப்லோ பிகாசோவின் ‘Woman with a Watch’ என்ற ஓவியம் சுமார் 14 கோடி டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று (8ம் தேதி) தலை சிறந்த ஓவியங்களை ஏலம்…

ஸ்பானிஷ் ஓவியர் பாப்லோ பிகாசோவின் ‘Woman with a Watch’ என்ற ஓவியம் சுமார் 14 கோடி டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று (8ம் தேதி) தலை சிறந்த ஓவியங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு உலக புகழ் பெற்ற ஓவியர்களின் பல்வேறு ஓவியங்கள் ஏலம் விடப்படவுள்ளது.

இந்த ஏல நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற ஸ்பானிஷ் ஓவியர் பாப்லோ பிகாசோவின் தலைசிறந்த ஒன்றும் ஏலம் விடப்படது.  இந்த ஓவியம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி பாப்லோ பிக்காசோவின் சிறந்த படைப்புகளில் ஒன்று சுமார் $140 மில்லியனுக்கு விற்கப்பட்டது.  அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1160 கோடி ஆகும்.  விடப்பட்ட ஓவியத்தைப் பற்றி பேசுகையில்,  அதன் பெயர் ‘Woman with a Watch’. இந்த ஓவியத்தில் இருக்கும் பெண் பிரெஞ்சு ஓவியர் மேரி-தெரேஸ் வால்டர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.