ட்ரம்பின் தலைமையில் அமைதி! – ரஷ்யா-உக்ரைன் போருக்கு தீர்வு காணுமா சந்திப்பு?

அமைதியை நோக்கிய டிரம்ப்- புதினின் தலைமை பண்பு பாராட்டத்தக்கது; ராஜதந்திரம் மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும் என இந்திய வெளியுறவுதுறை தெரிவித்துள்ளது

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான சந்திப்பை இந்தியா வரவேற்றுள்ளது. உக்ரைனில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவர, ட்ரம்ப் மற்றும் புதினின் தலைமைப் பண்பும், ராஜதந்திர அணுகுமுறையும் பாராட்டத்தக்கது என இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகமே உக்ரைன் போருக்கு விரைவில் முடிவு வேண்டும் என விரும்புகிறது. அமைதியை நோக்கிய ட்ரம்ப் மற்றும் புதினின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமாக மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இந்தச் சந்திப்பு உலக அமைதிக்கு வழிவகுக்கும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் மற்றும் புதின் சந்திப்பு குறித்து பல்வேறு உலக நாடுகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தை போர் முடிவுக்கு வருமா, அல்லது மேலும் சிக்கல்களை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரு உலக வல்லரசுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசுவது சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, உக்ரைன் போர், எரிசக்தி நெருக்கடி மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்கு இந்தச் சந்திப்பு தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.