நடிகர் நானா படேகர் மறைவு – ஆளுநர் விசுவநாத் அர்லேகர் இரங்கல்!

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகரின் மறைவுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். கோவாவின் டோனா பவுலாவில் உள்ள அவரது வீட்டில் மயக்கம் அடைந்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணச் செய்தி திரைத்துறையினர், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் நடிகர் நானா படேகர் மறைவுக்கு தமிழக ஆளுநர் ராசேந்திர விசுவநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புகழ்பெற்ற நடிகர் நானா படேகர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவு இந்திய சினிமா மற்றும் நாடகத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தனது அசாதாரணமான பன்முகத்தன்மை, தீவிரமான நடிப்பு, தனித்துவமான குரல் மற்றும் கம்பீரமான தோற்றம் ஆகியவற்றால், அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் குறிப்பிடத்தக்க ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் கொண்டு வந்தார்.

அவரது அச்சமற்ற கலைத்திறனும் ஈடு இணையற்ற பாணியும், தலைமுறை தலைமுறையாக ரசிகர்களின் இதயங்களில் அவருக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்தது. சினிமா உலகத்தைத் தாண்டி, சாமானிய மக்கள் மீதான அவரது பரிவும், மனிதாபிமானப் பணிகளுக்கான அவரது அர்ப்பணிப்பும், சமூகப் பொறுப்புணர்வின் ஆழமான தன்மையைப் பிரதிபலித்தன. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அபிமானிகள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும், இந்திய சினிமா மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய நீடித்த பங்களிப்பு, வரும் தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கட்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.