நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் : எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆலோசனை!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்தியா கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்தியா கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையடுத்து  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் எதிர்கட்சி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, ஆதிர்ரஞ்சன் செளத்ரி, சுப்ரியா சுலே, டெரிக் ஓ பிரையன், ராகவ் சத்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல், பாரதம் என பெயர் மாற்றம், மணிப்பூர் விவகாரம் உள்ள உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: “எதிர்க்கட்சிகளை அரசாங்கம் நம்பிக்கைக்கு எடுத்துக்கொள்ளாதது மற்றும் வரவிருக்கும் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்காதது இதுவே முதல்முறை.

மக்கள் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். அந்த பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதும், இந்த உணர்வுடன் இந்த சிறப்பு அமர்வில் பங்கேற்க வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம் என் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.