கிரே லிஸ்டில் பாகிஸ்தான் தொடரும்: FATF

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்காத நாடுகளை கருப்பு மற்றும் கிரே பட்டியலில் வைக்கும் FATF, பாகிஸ்தானை கிரே பட்டியலில் இருந்து நீக்க மறுத்துவிட்டது.  Financial Action Task Force (FATF) அமைப்பின் முழுமையான…

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்காத நாடுகளை கருப்பு மற்றும் கிரே பட்டியலில் வைக்கும் FATF, பாகிஸ்தானை கிரே பட்டியலில் இருந்து நீக்க மறுத்துவிட்டது. 

Financial Action Task Force (FATF) அமைப்பின் முழுமையான ஆய்வுக் கூட்டம் ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடந்த 14ம் தேதி தொடங்கி இன்று நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று, கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்படும் என அந்நாடு மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தது.

இதற்காக, பாகிஸ்தான் வெளியுறவு இணை அமைச்சர் ஹினா ரப்பானி கர் தலைமையிலான குழு இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றது.

எனினும், தற்போதைக்கு கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்படாது என FATF தலைவர் மார்கஸ் பிளேயர் தெரிவித்தார்.

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு FATF 27 நிபந்தனைகளை விதித்தது. பின்னர், மேலும் 7 நிபந்தனைகளை விதித்தது.

மொத்தமுள்ள 34 நிபந்தனைகளில் 32 நிபந்தனைகளை தாங்கள் நிறைவேற்றிவிட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, தங்கள் நாட்டை கிரே பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று  பாகிஸ்தான் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

எனினும், கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் இன்று நீக்கப்படாது என தெரிவித்த மார்கஸ் பிளேயர், பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் உறுதியானவை என்பதை நேரில் ஆய்வு செய்து உறுதி செய்த பிறகே நீக்கப்படும் என தெரிவித்தார்.

இதனால், பாகிஸ்தான் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.