“அட்டக்கத்தி” திரைப்படத்திற்குப் பின் ரஞ்சித் இயக்கியுள்ள முழுநீள காதல் திரைப்படத்தில் இருந்து ”ரங்க ராட்டினம்” என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரல்.
இயக்குநர் பா. ரஞ்சித் “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் என ரஞ்சித் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அப்படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான “விக்டிம்” ஆந்தாலஜியில் ரஞ்சித் இயக்கிய ‘தம்மம்’ படத்திற்கு இசையமைத்த ‘தென்மா ’ இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார். தென்மா இசையமைக்க “எஞ்சாயி எஞ்சாமி” பாடலை எழுதிப் பாடிய “அறிவு” இப்பாடலை எழுத எம்.எஸ்.கிருஷ்ணா, கானா முத்து, சங்கீதா சந்தோஷம், கவிதா கோபி, கார்த்திக் மாணிக்கவாசகம் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர்.
முன்னதாக வெளியான இப்படத்தின் முன்னோட்டமே இப்படத்தைக் குறித்த ஆவலைத், திரை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியான இப்பாடல் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
“காளிதாஸ் ஜெயராம்” இனியன் என்ற பெயரிலும், துஷாரா விஜயன் “ரெனே” என்ற பெயரிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’-ஆக நடித்த ஷபீர் இப்படத்திலும் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பா. ரஞ்சித்தின் முதல் படமான “அட்டக்கத்தி” திரைப்படத்திற்க்கு பின் ரஞ்சித் இயக்கியுள்ள முழுநீள காதல் கதை என்பதால், திரை ரசிகர்கள் இப்படத்தை திரையில் காண ஆவலாக உள்ளனர்.







