மின்வெட்டு குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்வீட் செய்த நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க மின்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வரும் பி.சி.ஸ்ரீராம். ‘மெளனராகம்’,’ நாயகன்’, ‘தேவர் மகன்’, ‘அலைபாயுதே’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள அவர் ‘மீரா’, ‘குருதிப்புனல்’, ‘வானம் வசப்படும்’ ஆகிய மூன்று படங்களையும் இயக்கி உள்ளார்.
இந்நிலையில், சென்னையில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு குறித்து இவர் தனது ட்விட்டரில் இன்று பதிவிட்ட நிலையில், உடனடியாக அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.
பிசி ஸ்ரீ ராம் ட்வீட்:
சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் அடிக்கடி மின் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. என்னதான் நடக்கிறது மின்சாரதுறையில்?
https://twitter.com/pcsreeram/status/1673155746530492416?s=20
மின்வாரியத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் ட்வீட்:
இந்த மின்தடை பிரச்சனையை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். சென்னை முழுவதும் தற்போது உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருதால் இதுபோன்ற குறைந்தபட்ச இடையூறு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
https://twitter.com/TThenarasu/status/1673184231462440960?s=20







