‘சொர்க்கவாசல்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சொர்க்கவாசல். பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த்…

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சொர்க்கவாசல். பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், சிறையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டிருந்தது. இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கு, நாயகியாக நடிகை சானியா ஐயப்பன் நடித்துள்ளார். படத்தில் கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த நவம்பரில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸுக்கு வந்துள்ளது. அதன்படி இப்படம் வரும் டிச.27ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.