மோகன்லால் இயக்கி நடித்துள்ள பரோஸ் திரைப்படம் ஜன.22ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமான படம் பரோஸ். இப்படத்தில் மோகன்லால், குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ்
வேகா, ரபேல் அமர்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
3டி-யில் உருவான இந்தப் படம் பான் இந்தியா படமாக கடந்த மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தோல்வியடைந்தது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 22-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாக உள்ளது.







