தமிழ்நாட்டில் சென்னை உட்பட பிற நகர்ப்புறங்களில் எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படக்கூடும் என ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியா-ஜப்பான் ஆய்வகம், ரிகா இன்ஸ்ட்டியூட் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மதிவாணன், ஜப்பான் கியோ பல்கலைக்கழகத்தின் இந்தியா-ஜப்பான் ஆய்வகத்தின் இயக்குனர் ரஜிப் ஷா, சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டுக்கான தூதர் டகா மசயுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொற்று நோய் குறித்தும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஆராய்ச்சி செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பருவநிலை மாற்றம், நிலத்தில் ஊடுருவும் கடல்நீர், பருவமழை பொய்த்தது உள்ளிட்ட காரணங்களால் சென்னை உள்ளிட்ட பிறநகரங்களில் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படக்கூடும் எனவும், அதனை தவிர்க்க இந்தியா-ஜப்பான் கூட்டுமுயற்சியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








