ஆஸ்கர் 2025 | விருதுகளை அள்ளிக் குவித்த ‘அனோரா’ திரைப்படம்!

97வது ஆஸ்கர் விழாவில் ‘அனோரா’ திரைப்படம் விருதுகளை அள்ளிக் குவித்தது.

திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கி கோலகலமாக நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : “தேர்வில் வென்று வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்” – பிளஸ் 2 மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்கினார்.  டோஜா கேட் , அரியானா கிராண்ட் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் நிகழ்ச்சியில் இசையரங்கேற்றினர். 2024 ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், அனோரா திரைப்படம் 5 விருதுகளை அள்ளிக் குவித்தது. இப்படம் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. அனோரா படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை ஷான் பேக்கர் வென்றார். சிறந்த நடிகைக்கான விருதை அனோரா படத்தில் நடித்த மைக்கி மேடிசன் வென்றார். மேலும், இப்படம் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த திரைக்கதை என 5 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.