“ஒருத்தனுக்கு பின்னாடி 4 கோடி பேரு நின்னா அவன் தலைவன்” – வெளியானது #Hitler திரைப்படத்தின் டிரெய்லர்!

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர்,  தயாரிப்பாளர்,  பாடகர்,  இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார்.  சமீபத்தில்…

"Orudhannu Pinnadi 40 Crore Beru Ninna Avan Thalaivan" - #Hitler Movie Trailer Released!

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர்,  தயாரிப்பாளர்,  பாடகர்,  இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார்.  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’, ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

‘படைவீரன்’,  ‘வானம் கொட்டட்டும்’  உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்திலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.  இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார்.  முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

இப்படத்தை செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷனல் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.