சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர் பலகையை திறந்து வைத்ததார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
நடிகர் விவேக் வசித்து வந்த பகுதியை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து அண்மையில், தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதில், திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணர், கலைமாமணி, பத்மஸ்ரீ விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி இம்மண்ணை விட்டு பிரிந்தார். அவரின் நினைவாக அவர்தம் வசித்து வந்த சென்னை மாநகராட்சி, 128-வது வார்டில் அமைந்துள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையினை அப்பகுதி வாழ் மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்திட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் முதலமைச்சர் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் துணைத் தலைவர் பூச்சி முருகன், கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கோரிக்கை கடிதம் வழங்கினார். அதில், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கை பெருமைப்படுத்தும் விதமாக ஏதேனும் ஒரு சாலை அல்லது தெருவிற்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில், மறைந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் சின்னக் கலைவாணர், கலைமாமணி, பத்மஸ்ரீ விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலையினை மாமன்றத்தின் பின்னேற்பு அனுமதிக்குட்பட்டு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்ய மேயர் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘காத்துவாக்குல 3 காதல்; ஒரே மேடையில் 3 பெண்களை திருமணம் செய்த நபர்’
இந்நிலையில், நகைச்சுவை நடிகராக வாழ்ந்து மறைந்த பத்மஸ்ரீ விவேக் வீடு அமைந்துள்ள விருகம்பாக்கம் பத்மாவதி சாலையை “சின்னக் கலைவானர் விவேக் சாலை” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயர் பலகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்ததார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன், துணை மகேஷ் குமார், முன்னணி நகைச்சுவை நடிகர்கள், சமூக ஆர்வலர்கள், அப்பகுதி வாழ் மக்கள் என பல்ரும் பங்கேற்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.