ஆன்மீக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை, அதிமுகவுக்கு மட்டுமே உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
கோவை காந்தி பூங்காவில் தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின், 44 வது செயற்குழு கூட்டத்தில், அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, ராஜேந்திரபாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும், என மனு கொடுத்தவுடன் அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டதாக சுட்டிக்காட்டினார். நான்கு மாதத்திற்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக நிச்சயம் தோல்வியைத் தழுவும் என்றும் அவர் குறிப்பிட்டார். கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும், உள்ளாட்சித்துறை சார்பில், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்