நாட்டில் ரூ .42 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது -ரிசர்வ் வங்கி!

நாட்டில் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 31ம் தேதியின் படி…

நாட்டில் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 31ம் தேதியின் படி
மொத்தம் 3.62 லட்சம் கோடி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்
இருந்தது. இதனையடுத்து கடந்த மே 19ல் 3.56 லட்சம் கோடி ரூபாய் அதன் புழக்கம்
குறைந்தது.

இந்நிலையில், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வங்கி
அறிவித்ததோடு செப்டம்பர் 30ம் தேதி வரை அந்த நோட்டுகளை வங்கியியில்
செலுத்தலாம் என்றும் அறிவிப்பாணையும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் நடவடிக்கையை
மக்கள் மேற்கொண்டனர்.

அதன்படி கடந்து ஜூலை 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 3.14 லட்சம்
கோடி மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், அதாவது 88 சதவிகிதம் திரும்ப
வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் தற்போது 42 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே வெளியில் பழக்கத்தில் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக திரும்ப பெறப்பட்ட தொகையில் 87 சதவிகதம் வங்கி கணக்கில்
செலுத்தியதன் மூலம் வந்துள்ளதாகவும், 13 சதவிகிதம் பண பரிமாற்றம் மூலம்
குறைந்த தொகை கொண்ட ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி
கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.