சின்ன வெங்காயம் நேற்று 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று விலை அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் இஞ்சி, வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளது.







