‘ஒன் டீ ப்ளீஸ்’ டோலி சாய்வாலா கடையில் தேநீர் அருந்திய “பில்கேட்ஸ்” – வீடியோ வைரல்!

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ்,  நாக்பூரில் டோலி சாய்வாலாவை சந்தித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.  மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை அறியாதவர்கள் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள்.  அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு…

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ்,  நாக்பூரில் டோலி சாய்வாலாவை சந்தித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை அறியாதவர்கள் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள்.  அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்,  இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  முதலில் வீடியோவில் ‘ஒன் டீ ப்ளீஸ்’ என்று சொல்வதைக் காண்பீர்கள்.  அதன் பிறகு, அந்த காட்சியை பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.  பில் கேட்ஸ் நாக்பூரில் டோலி சாய்வாலாவல் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்துவதைக் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

வீடியோவைப் பகிரும் போது, ​​ பில் கேட்ஸ், ‘இந்தியாவில்  ஒரு எளிய தேநீர் தயாரிப்பதில் கூட புதுமைகளைக் காணலாம்’ என்று தலைப்பில் எழுதியுள்ளார்.

நாக்பூரில் டோலி பல வருடங்களாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறார். அவர் தனது தனித்துவமான வழியில் தேநீர் தயாரிக்கும் சில வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.  அது மிகவும் வைரலானது.  அதன் பிறகு டோலி சாய்வாலா என்ற பெயரில் பிரபலமானார்.

ஆனால் இவ்வளவு பிரபலமான பிறகும்,  ஒரு நாள் பில் கேட்ஸிடம் இருந்து தனக்கு அழைப்பு வரும் என்றும்,  அவருக்கு டீ போட வாய்ப்பு கிடைக்கும் என்றும் டோலி சாய்வாலா நினைத்திருக்க மாட்டார்.   இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், தங்கள் கருத்துக்களை கமெண்ட்களில் பகிர்ந்து வருகின்றனர்.  வீடியோவைப் பார்த்த பிறகு நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.

https://twitter.com/Halmutai/status/1763048384800195054?s=20

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.