புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழப்பு!

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் பெண் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட…

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த
நிலையில், மேலும் பெண் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் டெங்கு, மலேரியா
உள்ளிட்ட பருவ காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி
குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 19 வயது
தனியார் கல்லூரியில் பயின்று வந்த காயத்ரி என்ற மாணவி காய்ச்சல் காரணமாக,
மூலகுளம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வந்தார்.

இந்நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மேலும் மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தர்மபுரி மேட்டுத்தெருவைச் சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி மீனா ரோஷினி (28)  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 8 ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

இதனால் புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
இரண்டாக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி
மற்றும் பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.