பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக அனைவரையும் சமமாக பார்ப்போம் என ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சிங்கம் என்ற பெயரில், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிங்கம் மாதத்தில் அஸ்தம நட்சத்திரத்தில் திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ ஒன்றறை வெளியிட்டுள்ளார். அதில், பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக அனைவரையும் சமமாக பார்ப்போம். நாடு முழுவதும் ஒற்றுமையும் , சமத்துவமும் மீண்டும் உண்டாக வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1696336360389607452?s=20







