ஸ்டிரைக் அறிவித்த நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்துள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகளில் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிக கட்டண வசூல் எனக்கூறி சிறை பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சொந்த ஊர் திரும்ப ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிறுத்த அறிவிப்பால், சொந்த ஊர் திரும்புவோர் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழக ஆம்னி பேருந்துகள் சங்கம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.







