அட.. இவரா..? பிரபல மலையாள இயக்குநருடன் இணையும் #SuperStar ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை பிரபல மலையாளர் இயக்குநர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்…

Oh.. is he..? #SuperStar Rajinikanth to team up with popular Malayalam director!

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை பிரபல மலையாளர் இயக்குநர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.


இந்த திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமாக ‘கூலி’ உருவாகி வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பான் இந்திய திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் இதில் நடிக்கின்றனர். ‘தேவா’ என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

கூலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த மலையாள பட இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப்புடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூட் ஆண்டனி ஜோசப் மலையாளத்தில் இயக்கிய 2018 திரைப்படம் ரூ. 175 கோடி வசூல் ஈட்டிய சாதனை படைத்தது. இந்த நிலையில் ஜூட் அண்டனி ஜோசப் ரஜினிக்கு கதை கூறியுள்ளதாகவும் இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.