காவிரியில் தண்ணீர் பெற்று தர வலியுறுத்தி திருவாரூரில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குருவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மேட்டூர் அணையில் போதிய நீர் வரத்து இல்லாததால், டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கருகும் பயிர்களை காப்பாற்றவும், உரிய தண்ணீர் திறக்கவும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடம் பெற்று தராத மத்திய அரசை கண்டித்து திருவாரூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவிரி டெல்டா விவசாயத்தை அழிக்க நினைக்கும் கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும், மேகதாது அணை கட்ட கூடாது என வலியுறுத்தியும் கண்டனக் கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்துரயிலை மறிக்க முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.