எதிலும் சமரசம் இல்லை; முதலமைச்சரின் வளர்ப்பு நான்: அமைச்சர் அன்பில் மகேஸ்

எதிலும் சமரசம் இல்லை; முதலமைச்சரின் வளர்ப்பு நான் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில்…

எதிலும் சமரசம் இல்லை; முதலமைச்சரின் வளர்ப்பு நான் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிக் கல்வியின் செயல்பாடு குறித்து கல்வித் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற்று வருகின்றனர்.

பின்னர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழகத்தில் 2,500 பள்ளிகள் மரத்தடியில் மாணவர்களுக்கு கல்வி கற்கும் சூழ்நிலையில் உள்ளது. புதிய கட்டிடங்கள், வகுப்பறைகள் மதில் சுவர்கள் ஆகியவற்றிற்கு நிதிகள் கேட்கப்பட்டுள்ளது. அந்த நிதிகள் வந்தவுடன் விரைவில் பணிகள் துவங்கும் என்றார் அன்பில் மகேஸ்.

அன்பில் மகேஸ் குறித்து டுவிட்டர் ட்ரெண்டிங் ஆனது குறித்த கேள்விக்கு, “அன்பில் பேரனுக்கு வந்த கொடுமை சார். இது கல்வி தொலைக்காட்சியின் இரண்டாவது அலைவரிசை துவங்குவதற்கு முறையாக அதற்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டு அவர்கள் மட்டுமே அவரை தேர்வு செய்தனர்.

அவரின் பின்புலம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் வருவதால் தற்பொழுது என்னையும் சேர்த்து விமர்சனங்கள் வருவதால் அதனை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளேன். தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளது போல் எதிலும் சமரசம் இல்லை அவருடைய வளர்ப்பு நான் இதை நான் பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறேன்” என்று பதிலளித்தார்.

புதிய ஆசிரியர்கள் 2,500 பேர் விரைவில் தேர்வாகி பணியில் அமர்த்தப்பட உள்ளனர். மேலும் ஆசிரியர்கள் அதிகமாக தேவைப்படுகிறார்கள்.

அவர்களுக்கான டெட் தேர்வு அனைத்தும் முறைப்படி நடத்தி பணியில் அமர்த்தப்படுவார்கள் என குறிப்பிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.