நெய்வேலி என்.எல்.சி-யில் வடமாநிலத்தை சேர்ந்த 28 பேருக்கு வேலை; என்.எல்.சி நிர்வாகம் விளக்கம்…

நெய்வேலி என்.எல்.சி-யில் வடமாநிலத்தை சேர்ந்த 28 பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, என்எல்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1992 முதல் 2012…

நெய்வேலி என்.எல்.சி-யில் வடமாநிலத்தை சேர்ந்த 28 பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக, என்எல்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1992 முதல் 2012 வரையிலான காலக்கட்டத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 28 பேருக்கு என்எல்சியில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக தவறான செய்தி பரப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள என்எல்சி சுரங்கங்கள் மற்றும் அனல் மின் திட்டங்களுக்காக நிலம் வழங்கிய அம்மாநிலத்தை சேர்ந்த 28 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

என்எல்சி நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கத்தில் செய்திகள் பரப்படுவதால், 28 பேர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் மற்றும் ராஜஸ்தானில் உள்ள என்எல்சியில் பணியமர்த்தப்பட்டதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.