புது டெல்லி பிரகடனம் 2026 நிறைவேற்றம்: ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகள் புது டெல்லி பிரகடனம் 2026-ஐ ஒருமனதாக ஏற்றுக்கொண்டன. “எந்த உறுப்பினரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. டெல்லில்லி பிரகடனம் 2026 ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.” என்று பிரதமர் மோடி அந்த உச்சிமாநாட்டில் கூறினார்.

அந்தப் பிரகடனம். உலக ஒழுங்கைப் பாதிக்கும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளைம் எடுத்துரைத்தது. அவையாவன:

  • பயங்கரவாதம்: எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலான பயங்கரவாதத்தையும் பிரிக்ஸ் அமைப்பு வன்மையாகக் கண்டித்ததுடன், ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலையும் கண்டித்தது. மேலும், சகிப்புத் தன்மையற்ற அணுகுமுறை. பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச பயங்கரவாதம் மீதான ஐ.நா.வின் விரிவான உடன்படிக்கையைவிரைவில் ஏற்றுக்கொள்ளவும் அது அழைப்பு விடுத்தது.
  • மோதல் தடுப்பு: மோதல்களின் மூல காரணங்களைக் களைவது உட்பட மோதல்களைத் தடுப்பதற்கான முயற்சிகளின் முக்கியத்து வத்தை பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்தின.
    சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பது: உரையாடல், கலந்தாலோசனை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான உறுதிப்பாட்டை அந்தப் பிரகடனம் மீண்டும் வலியுறுத்தியது.
  • வலுவான பன்முகத்தன்மை: நாடுகளின் மாறுபட்ட தேசிய கண்ணோட்டங்களையும் நிலைப்பாடுகளையும் கருத்தில் கொள்ளும் ஒரு பன்முக அணுகுமுறையை பிரிக்ஸ் ஆதரித்தது.
  • ஒருதலைப்பட்ச வர்த்தக நடவடிக்கைகள் மீதான கவலை: வர்த்தகத்தைச் சிதைப்பதாகவும், உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு முரணானதாகவும் உள்ள ஒருதலைப்பட்சமான சுங்கவரி மற்றும் சுங்கவரி அல்லாத நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.