மைக்கேல் ஜாக்சனின் 26 வயது மருமகன் ஜாஃபர் ஜாக்சன், அன்டோயின் ஃபுகுவா இயக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் ‘மைக்கேல்’ வாழ்க்கை வரலாற்றில் பாப் மன்னராக நடிக்க உள்ளார்.
இது குறித்த அறிவிப்பை நேற்று திங்கள்கிழமை Lionsgate அறிவித்திருந்த நிலையில், இப்படத்தை ஆஸ்கார் விருது பெற்ற ‘Bohemian Rhapsody’ படத்தின் தயாரிப்பாளர் கிரஹாம் கிங் தயாரிப்பார் என்ற தகவலையும் தெரிவித்திருந்தது. மைக்கேல் ஜாக்சனின் சகோதரரான ஜெர்மைன் ஜாக்சனின் இரண்டாவது இளைய மகன் தான் இந்த ஜாஃபர் ஜாக்சன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே சொந்தமாக இசையமைத்து பாடல்களை வெளியிட்டு வரும்
நிலையில், தனது முதல் தனிப்பாடலான “Got Me Singing.”என்கிற ஆல்பத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர்.
இப்படத்தில் ஜாஃபர் தேர்வானத்தை குறித்து விவரித்த படத்தின் தயாரிப்பாளர் கிரஹாம் கிங் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஜாஃபரை சந்தித்தேன், அவர் மைக்கேலின் திறமை மற்றும் ஆளுமையை இயல்பாக வெளிப்படுத்தும் விதம் கண்டு வியந்தேன், சொல்லப்போனால் இது ஒரு ஆச்சரியமான சம்பவம், காரணம் உலகளாவிய தேடலை
நடத்திய பிறகும், இந்த பாத்திரத்தை ஏற்ற ஒரே நபர் அவர் மட்டுமே என்பது தெளிவாகியது.” என்று கூறி இருந்தார்.
இது தவிர படத்தின் இயக்குனர் அன்டோயின் ஃபுகுவா தனது இன்ஸ்டாகிராமில், ஜாக்சனின் கதாபாத்திரத்தில் வரவிருக்கும் ஜாஃபரின் கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்ததோடு அதில் ஜாக்சசனாக தோன்றும் ஜாஃபர் “மைக்கேலைப் பின்பற்றும் இயல்பான திறனையும் கேமராவுடன் அத்தகைய சிறந்த வேதியியலையும் கொண்டுள்ளார்”
என்று பாராட்டியிருந்தார். அதே போல் படத்தின் நாயகன் ஜாஃபர் ஜாக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ”எனது மாமா மைக்கேலின் கதையை உயிர்ப்பிப்பதில் நான் தாழ்மையும் பெருமையும் அடைகிறேன். உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்ககளையும், விரைவில் வந்து சந்திக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
2009 தில் மறைந்த ‘பாப் மன்னன்’ மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு கிளாடியேட்டர் மற்றும் தி ஏவியேட்டர் போன்ற வெற்றி படங்களுக்கு திரைக்கதை எழுதிய ஜான் லோகனால் அவர்கள் தான் திரைக்கதை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
- பி. ஜேம்ஸ் லிசா










