நீட் வினாத்தாள் கசிவு | இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

மேலும், நாடாளுமன்றத்தில் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில், நீட் தேர்வுக்கு எதிராகவும், சிஜேபி இளைஞர்களுக்கு ஆதரவாகவும் நேற்று மாலை டெல்லியில் உள்ள இந்தியா கேட் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பிக்களுடன் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.