டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு…

  காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ராகுல் இன்று டில்லியில் உள்ள சரத்பவார் இல்லம் சென்று சந்தித்து பேசினார். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடத்தி…

 

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ராகுல் இன்று டில்லியில் உள்ள சரத்பவார் இல்லம் சென்று சந்தித்து பேசினார்.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தன. இந்நிலையில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.

இதனையடுத்து மகாராஷ்ட்ராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே விரிசல் ஏற்பட்ட நிலையில், 40 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவளிப்பதாக அஜித் பவார் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, மகாராஷ்டிராவின் துணை முதல்வராக அஜித் பவார் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சோ்ந்து அக்கட்சியைச் சோ்ந்த 8 எம்எல்ஏ-க்கள் மாநில அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இந்நிலையில் சரத்பவார் தலைமையில் இன்று தேசியவாத கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்திற்கு பின் சரத்பவார் பேசியது, எனக்கு 82 வயது என்ன 92 வயதானாலும் திடகாத்திரமாகத்தான் உள்ளேன். நான் தான் கட்சியின் தலைவர். சிலர் தலைவன் என அறிவித்துக்கொண்டதை யாரும் நம்ப வேண்டாம்என்றார். இதற்கிடையே காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் இன்று டில்லியில் உள்ள சரத்பவார் இல்லம் சென்று சந்தித்து பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.