30.5 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் உலகம்

ரிஷி சுனக்கை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள் – சுதா மூர்த்தி பெருமிதம்

ரிஷியை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள்’ என்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று முதல் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் பிரபல தொழில் அதிபரும், ‘இன்போசிஸ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவுகிறது.

அதில் சுதா மூர்த்தி கூறி இருப்பதாவது:- இது மனைவியின் மகிமை. ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள. என் கணவரை (நாராயணமூர்த்தி) நான் தொழில் அதிபர் ஆக்கினேன். என் மகள், அவளது கணவரை (ரிஷி சுனக்) இங்கிலாந்து நாட்டுக்கு பிரதமர் ஆக்கி இருக்கிறாள். இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், 2009-ம் ஆண்டு, என்.ஆர்.நாராயணமூர்த்தி-சுதா தம்பதியரின் மகள் அக்ஷதா மூர்த்தியை காதலித்து மணந்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் (வயது 42) உயர்ந்தார். அந்த நாட்டின் மிக இளம் வயது பிரதமர் ரிஷி சுனக்தான்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading