கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் விவசாயம் செய்துவரும் எம்.எஸ்.தோனியின் நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் தோனி கடந்த ஆண்டு அறிவித்தார். இருப்பினும் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருவது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி விவசாயத்தில் தீவிரமாக களமிறங்கினார். ஜார்க்கண்டில் உள்ள தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விளைவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தோனியின் நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்கு ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது. இதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் உலக அளவில் வணிகத்தை உயர்த்த முடியும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பொதுவாக ஜார்க்கண்டில் தொழில் நிறுவனங்களை அமைக்க பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவதில்லை என கூறப்படுகிறது. ஆனால் தற்போது தோனி மேற்கொண்டுள்ள இந்த முயற்சி உலக அளவில் கவனம் பெறும் என்பதால் மற்ற விவசாயிகளும் பலனடைவார்கள் என அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.