தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம் மே-12 ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அணை எம் எஸ் தோனி. இந்திய அணிக்காக ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பை உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி நீரஜ் பாண்டே இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான படம் ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’. கிரிக்கெட்டர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான இதில் திஷா பதானி, கியாரா அத்வானி, அனுபம் கெர், பூமிகா சாவ்லா, கிராந்தி பிரகாஷ், அலோக் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து உலகம் முழுவதும், பெறும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், வருகிற மே 12ம் தேதி மீண்டும் திரையிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில், தோனி எங்கு சென்றாலும் கிடைக்கிற அமோக வரவேற்பை கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.







