ரசிகரின் ஷூவில் கையொப்பமிட்ட தோனி | இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மகேந்திர சிங் தோனி ரசிகரின் ஷூவில் ஆட்டோகிராப் போட்ட வீடியோ இணையத்தில் வைரலகி வருகிறது.  இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சமீபகாலமாக தான் செல்லும் இடங்களில் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.  அப்போது…

மகேந்திர சிங் தோனி ரசிகரின் ஷூவில் ஆட்டோகிராப் போட்ட வீடியோ இணையத்தில் வைரலகி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சமீபகாலமாக தான் செல்லும் இடங்களில் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.  அப்போது ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ச்சி அடைகின்றனர்.  அந்த வகையில் சித்தார்த் கெர்கெட்டா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் எம்.எஸ்.தோனி ரசிகரின் ‘ஷூ’வில் ஆட்டோகிராப் போட்டு கொடுக்கும் காட்சி உள்ளது.  உடனே அந்த ரசிகர் எல்லையில்லா மகிழ்ச்சி அடையும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது.

இந்த வீடியோ வைரலாகி 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப் பார்த்த பயனர்கள் பலரும் அந்த ரசிகரை மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும், அவரது ‘ஷூ’ விலைமதிப்பற்றது எனவும் பதிவிட்டு வருகின்றனர்.  ஒரு பயனர்,  சித்தார்த் நீங்கள் அந்த ஷூ வை எப்போதும் அணிய வேண்டாம். பிரேம் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.