வெளியானது #HipHop ஆதியின் ’கடைசி உலகப் போர்’ படத்தின் ட்ரெய்லர்!

நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை…

Movie, kadaisi ulagapor, Hiphop Tamizha,

நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. சமீபத்தில் தனது 8ஆவது படத்தின் பெயரை அறிவித்தார். ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் இந்தப் படத்துக்கு, “கடைசி உலகப் போர்” எனப் பெயரிட்டுள்ளது. இதன் முதல் பார்வை போஸ்டர், கிளிம்ஸ் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது.

இதையும் படியுங்கள் : தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் : மகளிர் #Highjump -ல் தங்கம் வென்றார் இந்தியா வீராங்கனை பூஜா!

இந்த திரைப்படத்தின் முதல் பாடலை சமீபத்தில் வெளியிட்டனர். இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 5 மணிக்கு வெளியாக வேண்டிய ட்ரெய்லர் தாமதாமாக 7 மணிக்கு வெளியானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.