கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ராமச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் லிஃப்டில் ஒரு தாயும், இரண்டு குழந்தைகளும் சிக்கிக் கொண்டனர். மணலூரைச் சேர்ந்த
அஸ்வதி மற்றும் அவரது மகன் காளீஸ்வரன் மற்றும் மகள் ஸ்ரேயா ஆகியோர் துணிகள் வாங்கிவிட்டு வெளியே செல்ல லிஃப்டில் ஏறிய போது உள்ளே சிக்கியுள்ளனர்.
அவர்கள் லிஃப்டில் சிக்கிக்கொண்டதை அறிய மிகவும் தாமதமாகியுள்ளது. பின்னர் உள்ளே யாரோ சிக்கி கொண்டதை அறிந்த கடை நிர்வாகம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் லிஃப்டை அகற்றி தாய் மற்றும் குழந்தைகளை வெளியே எடுத்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லிஃப்ட் பழுதடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.







