மக்கள் பள்ளி திட்டம் பற்றி நாளை முக்கிய அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

மக்கள் பள்ளி திட்டம் குறித்து, முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடு வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரி வித்துள்ளார். சென்னை கிண்டியில் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

மக்கள் பள்ளி திட்டம் குறித்து, முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடு வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரி வித்துள்ளார்.

சென்னை கிண்டியில் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தேசிய வருவாய்வழி கல்வி உதவித் தொகை திட்டத் தேர்வுக்கான ( NMMS) புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமப்புற மாணவர் களுக்கு NMMS தேர்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறிய அவர், மக்கள் பள்ளி திட்டம் குறித்து முதலமைச்சர் முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுவார் எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.