மறைந்த பாடகி பவதாரணி இறுதியாக இசையமைத்த திரைப்படம் தான் ‘புயலில் ஒரு தோணி பத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டில் பல தலைமுறைகள் பேசக்கூடிய பாடல்களைத் தந்து இசை அரசராக பார்க்கப்படும் இசைஞானி இளையராஜாவின் மகள் தான் பாடகி பவதாரணி. இவர் 30 படங்களில் நிறைய பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் 10 படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். இவருடைய தனித்துவமான குரல் வளத்தால் அடையாளம் காணப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பு 47 வயதான பவதாரணி கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். இவரது மறைவு ரசிகர்களை மட்டுமல்ல திரை பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சில நாட்களாகவே பவதாரணியை பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.
அவர் கடைசியாக இசையமைத்த திரைப்படம் தான் ‘புயலில் ஒரு தோணி’. புதுமுகங்கள் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனாசிங் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை ஈசன் இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில் இப்படம் குறித்து சமீபாத்தில் இயக்குநர் ஈசன் கூறியது :
“பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையை தேர்வு செய்யும் முன்பாகவே பவதாரிணியை தான் இசையமைப்பாளராக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.
நான் முழு படத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போனது. படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன் தான் எழுதியுள்ளார். இரண்டு பாடல்களையும் மிக விரைவாகவே எங்களுக்கு கொடுத்து ஆச்சர்ய படுத்தினார்.
இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும். ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும், பின்னணி இசை மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் அமைத்துள்ளார்.
படம் வெளிவருவதிற்கு முன்பாக இவ்வாறு நிகழும் என்று துளியளவும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்போதும் எங்களால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. எங்கள் திரைப்படத்தின் மிக பெரியப் பலம் அவர், பவதாரிணி கிரீடத்தில் உள்ள வைர கல். எங்கள் திரைப்படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம்”என தெரிவித்தார்.








