#Marriage-க்கு ரெடியான மேகா ஆகாஷ் | மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான மேகா ஆகாஷிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சிம்பு தனுஷ் நடித்த படங்கள் உள்பட பல படங்களில் நாயகியாக நடித்த நடிகைக்கு திருமணம் நிச்சயதார்த்தம் ஆகி உள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி…

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான மேகா ஆகாஷிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

சிம்பு தனுஷ் நடித்த படங்கள் உள்பட பல படங்களில் நாயகியாக நடித்த நடிகைக்கு திருமணம் நிச்சயதார்த்தம் ஆகி உள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். சிம்பு நடித்த ‘வந்தா ராஜா தான் வருவேன்’ தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ உட்பட சில தமிழ் படங்களில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இவர்தான் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்களை மேகா ஆகாஷ் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து எனது கனவு நினைவாகிவிட்டது, அன்பு, சிரிப்பு மகிழ்ச்சி என்னுடைய வாழ்வில் தொடங்கிவிட்டது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.