இந்திய மருத்துவ முறைகளின்படி புற்றுநோய்க்கு மருந்து: மத்திய அரசு முயற்சி

இந்திய மருத்துவ முறைகள் மூலம் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அகில இந்திய ஆயுர்வேத நிறுவனமும், தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து புற்றுநோய்க்கு மருந்து…

இந்திய மருத்துவ முறைகள் மூலம் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனமும், தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடக்கிறதா என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி  சோமு மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய ஆயுஷ்  துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் அளித்த பதிலில், ‘தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்த புற்றுநோயியல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய மருத்துவ முறைகளின்படி அமைந்த மருந்துகளின் அடிப்படையில் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் திட்டங்களை செயல்படுத்துவது இந்த மையத்தின் நோக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம் இந்திய மருத்துவ முறைகளின்படி புற்றுநோய்க்கான மருந்தை கண்டறியும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.