‘டெல்லியில் மயிலாடுதுறை எம்பி சுதாவின் நகை பறிப்பு சம்பவம்’ – குற்றவாளி கைது!

டெல்லியில் மயிலாடுதுறை எம்பி சுதாவின் நகை பறிப்பு சம்வத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 21ம் தேதி  நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளில் இருந்தே பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம்  மயிலாடுதுறை எம்பி சுதாவின் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி  மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயினை பறித்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து எம்பி சுதா , இது குறித்து சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் எம்.பி சுதா அவர்களின் தங்க நகையை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் திருடப்பட்ட நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.