ரூ.100 கோடி வசூலித்த மார்க் ஆண்டனி! லேட்டஸ்ட் அப்டேட்…

விஷால், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.     விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில்…

விஷால், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.    

விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் 15-ம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழு முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்கில் வந்து பார்த்து ரசித்தனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பை பலரும் பாராட்டினர். இதையடுத்து விஷாலும்,  எஸ்.ஜே.சூர்யாவும் படத்தின் வரவேற்புக்கு அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தனர்.

படம் வெளியாகி 9 நாட்கள் முடிவடைந்த நிலையில் ரூ.82 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 100 கோடி வசூலில் இடம் பிடித்துள்ளது.  அடுத்தடுத்த வாரங்களில் வெளியான படங்கள் சரியாக போகாததால் மார்க் ஆண்டனிக்கு சாதகமாக அமைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.