கடந்த வாரம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருந்த மருத்துவ மாணவர்கள் விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவ, இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 270 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து ஏஐ 171 என்ற எண்ணுக்கு பதிலாக ஏஐ 159 என்ற எண் கொண்ட விமானத்தை லண்டனுக்கு இயக்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. பின்னர் போயிங் விமானங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை ஏர் இந்தியா நிறுவனத்தை அறிவுறுத்தியது. இந்த நிலையில் ஏர் இந்தியாவின் பல விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்:
AI915 – டெல்லி முதல் துபாய் வரை – B788 ட்ரீம்லைனர்
AI153 – டெல்லி முதல் வியன்னா – B788 ட்ரீம்லைனர்
AI143 – டெல்லி முதல் பாரிஸ் வரை – B788 ட்ரீம்லைனர்
AI159 – அகமதாபாத் முதல் லண்டன் வரை – B788 ட்ரீம்லைனர்
AI170 – லண்டன் முதல் அமிர்தசரஸ் – B788 ட்ரீம்லைனர்
AI133 – பெங்களூருவிலிருந்து லண்டன் வரை – B788 ட்ரீம்லைனர்
AI179 – மும்பை – சான் பிரான்சிஸ்கோ – B777








