ஓடிடியில் வெளியானது மஞ்சுமெல் பாய்ஸ்!…

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.  இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல் குணா குகையை…

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது.

இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.235 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.  இந்த நிலையில், இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

https://twitter.com/DisneyPlusHS/status/1786827617573675403?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1786827617573675403%7Ctwgr%5E490cd5e379f0450d38f9a3e99fd1b24ef97dea45%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2024%2FMay%2F05%2Fmanjummel-boys-ott-2

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.