மணிப்பூர் வன்முறை விவகாரம்: மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்…

மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.  மணிப்பூரில் மைதேயி இன மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையே  இருந்து வந்த மோதல் வன்முறையாக வெடித்தது.கடந்த…

மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. 

மணிப்பூரில் மைதேயி இன மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையே  இருந்து வந்த மோதல் வன்முறையாக வெடித்தது.கடந்த மே மாதம் 3 ம் தேதி தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .இந்த வன்முறையில் இதுவரை, 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருப்பதாகவும், 350க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், டெல்லி, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு அமித்ஷா தலைமை வகிக்கிறார்.  இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனை சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி. மற்றும் அதிமுக சார்பில் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  மேகாலயா மாநில முதல்வர் கான்ராட்.கே.சங்கமா-வும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.