மணிப்பூர் கொடூர சம்பவம்; மேலும் இரு குற்றவாளிகள் கைது!

மணிப்பூர் கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரு குற்றவாளிகளை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர். மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. இதனால் இரு மாதங்களுக்கு…

மணிப்பூர் கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரு குற்றவாளிகளை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.

மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. இதனால் இரு மாதங்களுக்கு மேலாக தொடர் பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே, இரு பெண்களை நிர்வாணப்படுத்திய ஒரு கும்பல், அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம் குறித்த வீடியோ வெளியானது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இரண்டு நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. இந்த சூழலில், கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 4 குற்றவாளிகள் கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டு 11 நாட்கள் போலீஸ் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்ச்சியாக, 19 வயது இளைஞர் உட்பட இரு குற்றவாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.