கூண்டுக்குள் இருக்கும் சிங்கம் ஒருவரை கட்டி அணைத்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் பலரது பொழுதுபோக்காக மொபைல் போன்களும் சமூக வலைதளங்களும் மாறி விட்டன. இணைய வசதிகளாலும் மொபைல் பயன்பாட்டினாலும் உலகம் நமது கைக்குள் அடங்கி விட்டது எனக் கூறினாலும் அது மிகையல்ல. உலகின் எந்தவொரு மூலையில் நடக்கும் சம்பவங்களும் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி விடுகின்றன. அந்த வகையில் தற்போது சிங்கம் ஒரு நபருடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக சிங்கத்தை பார்தாலே அனைவருக்கும் பயம் ஏற்படும். ஆனால் இங்கு சிங்கம் ஒருவருடன் விளையாடியது. மேலும், அவரை அந்த சிங்கம் கட்டி அணைப்பது போல் அந்த வீடியோவில் காட்சி அமைந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பயனர் மியான் சாகிப் என்பவர் இந்த வீடியோவை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோவில் கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்துடன் விளையாடுவது போலும், அந்த சிங்கம் அவரை அணைத்துக்கொள்வதும் இடம்பெற்றிருக்கும்.
இதையும் படியுங்கள் ; “உன்னை புதைக்கவில்லை, விதைத்துள்ளோம்” – பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷின் நினைவு தினத்தையொட்டி #PrakashRaj பதிவு!
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பயனர் மியான் சாகிப் பகிர்ந்த வீடியோ பதிவு தற்போது அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.







