White Brown Black என்ற பிரபலமான பஞ்சாபி பாடலுக்கு குட்டி பாவாடையுடன், ஹை ஹீல்ஸ் அணிந்து நடனமாடும் ஒருவரின் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.
White Brown Black என்ற பஞ்சாபி பாடல் கடந்த 2022 டிசம்பரில் வெளியானது முதலே பிரபலமாகி, நாடு முழுவதும் பலரும் மொழியினை கடந்து விரும்பி கேட்கும் பாடலாக இருந்து வருகிறது. குறிப்பாக, மக்கள் தாங்கள் கொண்டாடும் விழா நேரங்களில் இந்த பாடலை ஒலிக்க விட்டு நடனமாடி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வந்ததோடு, பலர் தொடர்ந்து இது தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வைரலாக்கி வந்தனர்.
அந்த வரிசையில் இந்த டியூனுக்கு, ஒரு நபர் கவர்ச்சிகரமான உடை அணிந்து குட்டி பாவாடையுடன், ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டு நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. கடந்த மே 24 அன்று chowenlai என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, இதுவரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதோடு, லைக்குகளையும் பல கருத்துக்களையும் குவித்து வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








