முக்கியச் செய்திகள் இந்தியா

தேர்தலுக்காக மமதா “ஜெய்ஸ்ரீராம்” என முழக்குவார்: – அமித்ஷா!

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, முதல்வர் மமதாவையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது, “மமதா தேர்தலுக்கு முன்பு ஜெய்ஸ்ரீராம் எனும் முழக்கத்தினை கையில் எடுப்பார்.” என்று தேர்தல் பரப்புரையில் தற்போது கூறியுள்ளார். மேலும், “இந்த தேர்தல் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியின் மாடலுக்கும், மமதாவின் அழிவின் மாடலுக்கும் இடையே நடக்கும் போர்” என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்ஸ்ரீராம் முழக்கம் மமதாவை எரிச்சலடைய செய்துள்ளதாகவும், ஆனால், தேர்தலுக்காக அவர் இந்த முழக்கத்தினை பயன்படுத்துவார் என்றும் அமித் ஷா கூறியுள்ளார். இத்தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜக 200ஐ கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மற்றும் மமதா பங்கேற்ற நிகழ்ச்சியொன்றில் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, மமதா கோபமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

3-வது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்கும் மமதா பானர்ஜி!

Ezhilarasan

கொரோனா 2ம் அலையில் 776 மருத்துவர்கள் உயிரிழப்பு!

Halley karthi

சுகாதாரத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் புதிய திட்டம்: பிரதமர் தொடங்கி வைத்தார்

Ezhilarasan

Leave a Reply