33.6 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

மஹா சிவராத்திரி-மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி

மீனாட்சி அம்மன் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும்  பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி அளித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி உற்சவத்திற்காக வரும் 18-ம் தேதி இரவு முதல் கோயில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை 19.02.2023-ம் தேதி அதிகாலை வரை நடைபெறுகிறது. மேலும் அம்மன், சுவாமி மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில், பொதுமக்களும், சேவார்த்திகளும், பக்தப் பெருமக்களும், அபிஷேகப் பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை 18-ம் தேதி மாலைக்குள் கோயில் நிர்வாகத்தில் வழங்கலாம்.

அதேபோல, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயில்களில் மகாசிவாராத்திரி உற்சத்திற்கு அபிஷேக பொருட்கள் வழங்கலாம் எனவும், சிவராத்தி அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading